காலை சிற்றுண்டி திட்டம்.! மாணவர்கள் வருகை 40% வரை அதிகரிப்பு.! திட்டக்குழு அறிக்கை.!
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் வருகை 20 சதவீதம் அதிகரித்து உள்ளது என அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி, அவர்கள் இடை நிற்றலை தடுக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் தமிழக அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் படிப்படியாக நிறைவேற்றியது.
காலை சிற்றுண்டி :
இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றிய பின்பு மாணவர்களின் வருகையானது அதிகரித்து உள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் வருகை :
கடந்த 2022 ஜூன் மாத தரவுகளின் அடிப்படையில், இந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 1086 பள்ளிகளில் 20 சதவீதம் வருகை அதிகரித்து உள்ளதாகவும், அதில் 22 பள்ளிகளில் 40 சதவீதம் மாணவர்களின் வருகை அதிகரித்து உள்ளதாகவும் மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.