தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!
டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
நேற்று டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் சத்ரபதி சிவாஜி பிறந்தாநாள் விழா கொண்டாடப்பட்டது. மாணவர் அரங்கத்தில் ஏபிவிபி பிரிவு மாணவர்கள் இந்த விழாவை ஏற்பாடு செய்தனர். அந்த விழா முடிந்ததும் இடதுசாரி மாணவர்கள் ஆவணப்படம் திரையிட ஏற்பாடு செய்திருந்தனர் என கூறபடுகிறது.
தாக்குதல் : அப்போது இரு பிரிவு மாணவர்களும் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு மாணவர்களிடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில் இடதுசாரி மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் தமிழக மாணவர்களும் காயம்பட்டனர். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கோழைத்தனமானது : அதில், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்றும், ஏபிவிபி மாணவர்கள் பெரியார், கார்ல்மாக்ஸ் புகைப்படங்களை சேதப்படுத்தியது ஏற்புடையதல்ல எனவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.