ஜெயலலிதா இறந்தவுடன் காலம் தாழ்த்தாமல் முதல்வர் பதவிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார் ஓபிஎஸ். அதன் பின்னர் நடந்த அரசியல் சம்பவங்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால், கோவம் வந்து ஓபிஎஸ் தனது சுய லாபத்துக்காக தர்மயுத்தம் தொடங்கினார். – என ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் ஓபிஎஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
நேற்று சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவன் மரணம் தொடர்பான உண்மைகளை அறிய விசாரணை மேற்கொள்ள நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணைய அமைக்கப்பட்டது.
அதில் நேற்று பல்வேறு தகவல்கள் மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஜெயலலிதா மயக்கம் அடைந்தது முதல் நடைபெற்ற சம்பவங்கள் ரகசியமாக இருக்கிறது, ஜெயலலிதா இறந்த நேரம் சரியாக குறிப்பிடப்படவில்லை.
ஆஞ்சியோ சிகிச்சை கடைசி வரையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படவில்லை. சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை குற்றவாளிகளாக கருதி விசாரணை மேற்கொள்ளலாம் என அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்களை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை குழு வெளியிட்டு இருந்தது.
மேலும் ஓ.பன்னீர் செல்வம் பற்றியும் அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தவரும், ஜெயலலிதா இறந்த பின்பு உடனடியாக அந்த பதவியில் அமர்ந்த ஓபிஎஸ் பற்றி பல்வேறு அதிர்ச்சி தகவல் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில், ‘ ஜெயலலிதா இறந்தவுடன் காலம் தாழ்த்தாமல் முதல்வர் பதவிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் வாரிசாக ஓபிஎஸ் தன் நிலை நிறுத்திக் கொண்டது தற்செயலான நிகழ்வு கிடையாது.
அதன் பின்னர் நடந்த அரசியல் சம்பவங்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால், கோவம் வந்து ஓபிஎஸ் தனது சுய லாபத்துக்காக தர்மயுத்தம் தொடங்கினார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை முறையில் என்ன நடந்தது என்பதை முழுமையாக அறிந்த நபராக ஓபிஎஸ் இருந்துள்ளார்.
ஆனால். அதே ஓபிஎஸ் தர்மயுத்ததை தொடங்கி ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை மேற்கொள்ள சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பின்பு துணை முதல்வர் பதவியில் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டார். இதுவும் அவரின் தந்திரமாக இருக்கலாம்.
அதிகாரம் மையத்தின் சூழ்ச்சிகளால் கிடைத்த முதல்வர் பதவி ஓபிஎஸ்க்கு நீண்ட காலம் நீடிக்க வில்லை என்பதே நிதர்சனமான உண்மை. என நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் ஓபிஎஸ் மீது சரமாரி குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…