கலைஞர் என்னுள் இருந்து என்னை இயக்கிக் கொண்டிருக்கிறார் – முதலமைச்சர் ஸ்டாலின்
கலைஞர் இருந்தால் என்ன நினைப்பர், செயல்படுத்துவார் என்று சிந்தித்து செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
ரூரில் இன்று, திருமாநிலையூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். ரூ.28 கோடியில் முடிவுற்ற 95 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்வில், 80,750 பயனாளிகளுக்கு ரூ.500.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர், ஓராண்டாக ஓய்வின்றி உழைத்து வருகிறோம். இந்த ஓராண்டு ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது. தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை நினைத்து நான் மன நிறைவு அடைகிறேன். திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது முகத்தில் தெரிகிறது.
கலைஞர் இருந்தால் என்ன நினைப்பர், செயல்படுத்துவார் என்று சிந்தித்து செயல்பட்டு கொண்டிருக்கிறேன். கலைஞர் என்னுள் இருந்து என்னை இயக்கி கொண்டிருக்கிறார். மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை. அதனால் வீண் விமர்சனங்களுக்கும், அரை வேக்காடுகளுக்கும் பதிலளிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களையெல்லாம் சிறிது நேரம் பார்த்துக்கொண்டே இருக்க நினைக்கிறேன். கடலலை போல் திரண்டுள்ளீர்கள். கடலில்லாத கரூரில் மக்கள் கடலை வரவழைத்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. கரூர் என்றால் பிரம்மாண்டம். அதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு. இதை செய்து காட்டிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பாராட்டுகள். அவருடன் துணை நின்ற அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.