ஜாக்டோ ஜியோ மாநில நிர்வாகிகள் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.9 நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
அதேபோல் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
நேற்று ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.இதன் பின் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பள்ளித்தேர்வுகள் தொடங்க இருப்பதை கருத்தில் கொண்டு கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ், தேனி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 178 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.பின்னர் நேற்று அவர்கள் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…