ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் கைது செய்தது கண்டிக்கத்தக்கது-நல்லகண்ணு
போராடிய ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.அதன்படி ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்றது.
இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், போராடிய ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இது அரசின் அடக்குமுறையை காட்டுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.