பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரபலமானது. அந்த வகையில் இந்த ஆண்டு அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், கடந்த 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து, மதுரையில் அலங்காநல்லூர் அருகிலுள்ள கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் விறு விறுப்பாக கட்டப்பட்டு வருகிறது.
பொங்கல் செலவுக்கு ரூ.8000.. மக்கள் மகிழ்ச்சி.! முதல்வர் பெருமிதம்.!
இந்த அரங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் அரை வட்ட வடிவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த அரங்கம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் ஜனவரி 23-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கவும் இருக்கிறார்.
முதலமைச்சர் இந்த அரங்கத்தை திறந்து வைக்கும் தகவலை பதிவுத்துறை அமைச்சர் முன்னதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட இந்த அரங்கத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் என்னவென்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த அரங்கத்திற்கு “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…