அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் பொறுப்பாளர்களை தொகுதி வாரியாக நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் எந்த குற்ற பின்னணியும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். முழுநேர கட்சி பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, 10 நாட்களுக்குள் தொகுதி வாரியாக சிறப்பாக பணிபுரியும் வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொகுதி வாரியாக சிறப்பாக செயல்படும் பாஜக நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட பின் அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…