அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்.! ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை.!

Default Image

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானம் குறித்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது . 

அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

ஓபிஎஸ் மேல்முறையீடு :

இந்த வழக்கு ஒற்றை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்து, அவர் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து இரு நீதிபதி அமர்வுக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இன்று விசாரணை :

இந்த மேல்முறையீடு வழக்குகள் குறித்தான விசாரணை முன்னதாக விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்ததை அடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

டெல்லியில் இபிஎஸ் வழக்கு :

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Naxals Chhattisgarh Bijapu r
HMPV Virus
hair growth (1)
TN CM MK Stalin - TVK Leader Vijay - Governor RN Ravi
TN Governor RN Ravi - Tamilnadu Chief minister MK Stalin