இபிஎஸ்க்கு எதிரான ஓபிஎஸ் மேல்முறையீடு.! இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த உயர்நீதிமன்றம்.!
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் வழக்குகள் தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை ஒற்றை நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இரட்டை நீதிபதி அமர்வு :
ஒற்றை நீதிபதி அமர்வு தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பில் ஜே.டி.சி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்கு இரட்டை நீதிபதி அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
நேரடியாக இறுதி விசாரணை :
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டில் இடைகால உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தது. ஆனால், அந்த கோரிக்கையை இரட்டை நீதிபதி அமர்வு ஏற்க மறுத்துவிட்டது. இடைக்கால உத்தரவு என்பது வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்பதால் நேரடியாக இறுதி விசாரணையை தொடங்குகிறோம் என அறிவித்துவிட்டனர்.
அதன்படி, ஏப்ரல் 20ஆம் தேதி இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.