அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகை போதுமானது அல்ல – கே.பாலகிருஷ்ணன்
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்ற நிலையில், வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.
தமிழக அரசு தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மழை வெள்ளத்தினால், தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5,000 இழப்பீடு வழங்குக. சென்னை போன்ற நகரங்களில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொண்ட பணிகள் காரணமாக, கடந்த காலத்தைப் போல தண்ணீர் தேங்கவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்ற நிலையில், வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம். மேலும், தமிழ்நாடு அரசு பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திட உடனடியாக உத்தரவிட வேண்டும்.
அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகை போதுமானது அல்ல. வீடுகளில் தண்ணீர் புகுந்து, வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதனங்கள் உட்பட பாதிக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பகுதியாகவோ முழுமையாகவோ இடிந்த வீடுகளுக்கு ரூபாய் 15,000 வழங்கிட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இயற்கை பேரிடரிலிருந்து மக்களை பாதுகாக்க தேவையான நிதியை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான பேரிடர் நிதி வழங்க முன்வர வேண்டும் என்று சிபிஐ (எம்) மாநிலக்குழு கோருகிறது.
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) November 15, 2022