குடியுரிமை திருத்த சட்டத்தை அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.இதன் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக இந்த சட்டத்திற்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது திமுக அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அதன்படி குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று ( ஜனவரி 24-ஆம் தேதி) தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடத்துவது எந்த வகையில் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…