விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க நடவடிக்கை !தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை!

Default Image

பாஜக வேட்பாளர் தமிழிசை தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.அதேபோல் திமுக சார்பாக கனிமொழி போட்டியிடுகிறார்.

Image result for thoothukudi tamilisai

இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான பாஜக  வேட்பாளர் தமிழிசை அந்த தொகுதிக்கு மட்டும் தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.அதில்,விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பனைத் தொழில் உற்பத்தி பொருட்களுக்கு தனிசந்தை அமைத்து தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவடி பண்ணை அருகே அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் . தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தாமிரபரணி வடிநிலக் கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மத்திய அரசின் மூலம் நிதி பெற்று பெரியதாழையில் ரூ.200 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.திருச்செந்தூர் பாத யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தனி வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி – திருச்செந்தூர் – நெல்லை இடையே மின்பாதை அமைத்து மின்சார ரயில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்