இன்று தொடங்குகிறது காங்கிரஸ் கட்சியின் ஏர் கலப்பை பேரணி
விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ஏர் கலப்பை பேரணி தொடங்குகிறது.
வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.இந்த மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.பின்னர், குடியரசு தலைவரும் 3 மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தார்.ஆகவே இது சட்டமாகவும் அமலுக்கு வந்துவிட்டது.
இதனிடையே நாட்டின் வளர்ச்சி, விவசாயிகள் மேம்பாட்டுக்காக ஏர்கலப்பை பேரணிகள் விரைவில் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருந்தார்.அதன்படி, விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ஏர் கலப்பை பேரணி கோவையில் மாநாட்டுடன் தொடங்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.மேலும் இன்று நடைபெறும் விவசாயிகள் எழுச்சி மாநாட்டுக்கு பின் பேரணி தொடங்குகிறது.