தமிழக அரசின் எண்ணம் நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கி தருவதே ஆகும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் அமைக்கப்பட உள்ள நிலையில் ,இன்று சென்னை ராயபுரத்தில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,இந்த மினி கிளினிக்குகள் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.மினி கிளினிக் தொடங்கப்பட்டதற்கு காரணம் மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே சிகிச்சை பெறுவதற்காகத் தான்.தமிழக அரசின் எண்ணம் நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கி தருவதே ஆகும்.கடைக்கோடி உள்ள மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்கத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலே சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை மாநிலமாக உள்ளது.தமிழகம் மருத்துவத் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது .அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…