தமிழகத்தில் NRC-ஆல் முஸ்லிமிகளுக்கு பாதிப்பு வந்தால் அதிமுக தான் முதல் குரல் கொடுக்கும்..அமைச்சர் பகிர் பேச்சு.!

Default Image
  • 2020 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 9ஆம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
  •  தமிழகத்தில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட, அவர்களை பாதுகாக்கும் முதல் குரலாக அதிமுக தான் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

2020 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதில் முதலமைச்சர் எட்டப்படி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட சட்டசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நேற்றைய ஆலோசனையில் வரும் 9-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இன்று தமிழக சட்டப்பேரவை 2-ம் நாளாக தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், கலந்துகொண்டு பேசிய திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்துவிட்டு, பின்னர் ஆளுநர் உரையில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க, மத்திய அரசை வலியுறுத்துவோம் என கூறுவது ஏன்?என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, ஈழ தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும், குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறினார். அதேபோன்று என்.ஆர்.சி சட்டத்தால், தமிழகத்தில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட, அவர்களை பாதுகாக்கும் கொடுக்கும் முதல் குரலாக அதிமுக தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்