நிச்சயமாக இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்-அமைச்சர் செல்லூர் ராஜு
நிச்சயமாக இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் திமுக பெற்ற வாக்கு வித்தியாசங்களை காட்டிலும், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு வித்தியாசம் 8000 வாக்குகள் அளவிற்கு குறைந்துள்ளது.
அதிமுக வேட்பாளர்களை லேட்டா அறிவித்தாலும் லேட்டஸ்ட் ஆக அறிவிப்போம்.அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்று சேர்ந்துள்ளது. நிச்சயமாக இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.