பட்ஜெட் கூட்ட தொடர் : அனுமதி தராததால் வெளிநடப்பு செய்த அதிமுக எல்எல்ஏக்கள்.!
பட்ஜெட் கூட்ட தொடரில் தொடர் அமளியில் ஈடுப்பட்டு அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
தொடர் அமளி :
பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்து கொண்டிருக்கும் போதே, அதிமுகவினர் தங்களை பேச அனுமதிக்க கோரி தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுகவினரை அமைதியாக இருக்க கோரி சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார்.
அதிமுக வெளிநடப்பு :
இருந்தும், தொடர் அமளியில் அதிமுக எம்எல்ஏக்கள் ஈடுபட்டதால், நிதியமைச்சர் உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெரும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதனை அடுத்து, அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.