அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும்!அது ராஜன் செல்லப்பாவின் தனிப்பட்ட கருத்து -அமைச்சர் அன்பழகன்
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் அன்பழகன் கூறுகையில், ஜெயலலிதாவை போல் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துகிறார்கள், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் 46 மையங்களில் பி.இ சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன பி.இ சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு 044-22351014, 22351015 ஆகிய எண்களில் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.