மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ” அதிமுக அரசு மக்கள், விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்கியது.
கொரோனா வைரஸ் பரவி வந்த காலத்தில் முற்றிலும் அந்த வைரஸ் இல்லாமல் செய்தது நம்மளுடைய அதிமுக தலைமையிலான அரசு தான். அதிமுக அரசு கொரோனா பேரிடரை மிக சிறப்பாக கையாண்டு மக்கள் நலனை காத்தது. அதைப்போல, கஜா புயலின்போது புயலைவிட வேகமாக செயல்பட்டு பாதிப்புகளை நாங்கள் தான் சீரமைத்தோம்.
புயலால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.2,247கோடி நிவாரணத் தொகை வழங்கினோம். இப்படி பல நல்ல உதவிகளை மக்களின் நலனை கருது எங்களுடைய, நம்மளுடைய அதிமுக கட்சி செய்து கொடுத்துள்ளது. நான் முதல்வராக இருந்தபோது வறட்சி, புயல் உள்ளிட்ட இடர்களை எல்லாம் சமாளித்து சிறப்பான ஆட்சியை கொடுத்தேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ” மதுரை மண் ராசியான மண், இங்கே தொடங்கியது எல்லாம் வெற்றிதான். முதல் மாநாட்டை இங்கே நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…