அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
- மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பாமக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சு நடைபெற்றது.
- அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
- அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுக கூட்டணி கொள்கை அடிப்படையிலான கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல.நாடாளுமன்ற தேர்தலுடன் சில கட்சிகள் காணாமல் போய்விடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.