ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியமாக நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பிரதான கட்சிகள் வெகு தீவிரமாக தயாராகி வருகின்றன. அதே போல ஒரு கட்சியினர் மாற்று கட்சியினரை விமர்சிக்கவும் தயங்கவில்லை. அப்படி தான் ஆளும் கட்சி , எதிர்க்கட்சியினர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வருகின்றனர்.
நியாமான முறையில் தேர்தல் : தற்போது அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாமான முறையில் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .
பூத் சிலீப் : மேலும், அதில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர்கள் முறையாக இல்லை. இறந்தவர்களின் பெயரும் அதில் இருக்கிறது. அதே போல இரட்டை பதிவும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. எனவும், இதனால், கள்ளஓட்டு பதிவு செய்யும் அபாயம் இருக்கிறது. எனவே, பழைய பூத் சிலீப் முறைப்படி சரிபார்த்து தேர்தல் நடத்த வேண்டாம். வாக்காளர் அடையாள அட்டை கொண்டு சரிபார்த்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நாளை விசாரணை : அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தாக்கல் செய்த இந்த வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி டி.ராஜா தலைமையில் உள்ள அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது .
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…