தோல்வி உறுதி என்பதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் அதிமுக அரசு தள்ளிப்போடுகிறது-மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளர்.அவர் வெளியிட்ட அறிக்கையில்,உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் மாநிலத் தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும்.
அரசியல் சட்டப் பிரிவின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் உரிய கட்டளையை பிறப்பிக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கேட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.