கல்வி உதவித்தொகை வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் காட்டுகிறது – மு.க.ஸ்டாலின்
கல்வி உதவித்தொகை வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகமுக்கியமான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் காட்டுகிறது.
உதவித்தொகையில் ஊழல் நடைபெற்றுள்ளது, இது குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.