அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது- முதலமைச்சர் பழனிசாமி
அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் .
ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துகிறோம்.
அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது. ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.ராமநாதபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரியை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,650 மருத்துவ மாணவர் இடங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளன. நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று பேசினார்.