எந்த அரசாங்மாக இருந்தாலும் அது மக்கள் போட்ட பிச்சைதான் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கருணாநிதி மறைவையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்படும் என்றும் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அப்போது தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்திருந்தார்.அவர் கூறுகையில், கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை. மேல்முறையீடு செய்திருக்கலாம், ஆனால் நாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக போட்ட பிச்சை என்ற வார்த்தையை அமைச்சர் கடம்பூர் ராஜீ பயன்படுத்தியிருக்க கூடாது. எந்த அரசாங்மாக இருந்தாலும் அது மக்கள் போட்ட பிச்சைதான் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…