அதிமுக அரசு கருணாநிதிக்கு போட்ட பிச்சை …!எந்த அரசாங்மாக இருந்தாலும் அது மக்கள் போட்ட பிச்சைதான்…!மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

எந்த அரசாங்மாக இருந்தாலும் அது மக்கள் போட்ட பிச்சைதான் என்று  மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கருணாநிதி மறைவையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்படும் என்றும் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அப்போது தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து  தெரிவித்திருந்தார்.அவர் கூறுகையில், கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை. மேல்முறையீடு செய்திருக்கலாம், ஆனால் நாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார்.

Image result for மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது  அதிமுக போட்ட பிச்சை என்ற வார்த்தையை அமைச்சர் கடம்பூர் ராஜீ பயன்படுத்தியிருக்க கூடாது. எந்த அரசாங்மாக இருந்தாலும் அது மக்கள் போட்ட பிச்சைதான் என்று  மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்