#Breaking : அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு.!
அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதற்கும், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மதியம் முதல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமர்வு, வழக்கை நாளை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்துள்ளனர். நாளையும் வாதங்கள் பிரதி வாதங்கள் பதிவு செய்யப்படும். வாதங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுவிட்டால், அடுத்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.