அதிமுக எனும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு விட்டது – செல்லூர் ராஜு
மிழ்நாடு திராவிட பூமி; இங்கு திராவிட இயக்கம் மட்டும் தன் ஆட்சி அமைக்க முடியும் செல்லூர் ராஜு பேட்டி.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையில் தான் எப்போதும் கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக எனும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு விட்டது; அதில் ஏறுகிறவர்கள் டெல்லிக்கு செல்லலாம். கூட்டணியை நம்பி வந்தால் எரிக் கொள்வோம். தமிழ்நாடு திராவிட பூமி; இங்கு திராவிட இயக்கம் மட்டும் தன் ஆட்சி அமைக்க முடியும். இது பெரியார், அண்ணா மண் என தெரிவித்துள்ளார்.