அதிமுக வேட்பாளர் யார் என்பது வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான 10ம் தேதி அறிவிக்கப்படும்…!தம்பிதுரை
அதிமுக வேட்பாளர் யார் என்பது வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான 10ம் தேதி அறிவிக்கப்படும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான 10ம் தேதி அறிவிக்கப்படும்.தேர்தலை நடத்துவதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேர்தலை நடத்துவதும், ஒத்திவைப்பதும் தேர்தல் ஆணையத்தின் முடிவு. ரபேல் விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டு சேர்ந்து நாடகமாடுகின்றன என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.