அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் !திமுகவினர் எதிர்ப்பு
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது .
நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதேபோல் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர்.
தற்போது திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது .வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் முனியாண்டியின் பெயர் 2 இடத்தில் இருப்பதால் வேட்புமனுவை நிராகரிக்க திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.