அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.அப்போது அவர் கூறுகையில்,அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.அதேபோல் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படக் கூடாது என்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும் உள்ள திறைமறைவு உறவு வெளிப்பட்டு உள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் இருக்கும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.70 லட்சம் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.