அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது !!!!!
- அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
- அதில் 8 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன.
- மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும் , தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும் , த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி தலா 1 தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டிலை கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.அதில் 8 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.