2023-24ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.!

Default Image

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

பட்ஜெட் கூட்டத்தொடர்:

2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் அறிவித்திருந்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் சட்டப்பேரவையில் யார் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை எனவும் தெரிவிதியிருந்தார்.

தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை:

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கடந்த 2ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார். 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் 20ம் தேதி தாக்கலாக உள்ள நிலையில், நிதியமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில், பெரு, சிறு, குறு தொழில் நிறுவன சங்க பிரதிநிதிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்கள், நிதி சலுகைகள்  வேலைவாய்ப்பு குறித்து ஆலோசிக்கப்படகாகவும் கூறப்பட்டது.

கருத்துக் கேட்பு கூட்டம்:

இந்த நிலையில், 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், அமைச்சர்கள் பெரியகருப்பன், தா,மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்