இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது.!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கும் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக ககுழு கூட்டம் தொடங்கியுள்ளது. திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்தது.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கு எண்ணிக்கையில் தொகுதிகளை வாங்க வேண்டும் என்ற நிலையில் தான் திமுகவுடன் பேச்சுவார்த்தை போது தொடர் இழுபறி நீடித்து வந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏற்கனவே 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று விருப்ப பட்டியல் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் திமுக 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்துதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலக்கு எண்ணிக்கையில் தொகுதிகளை பெற வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது, திமுக 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்திருப்பது தொடர்பாக கூட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு ஒப்புதலுடன் இன்று மதியம் 12 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இருக்கிறது. அதை குறித்துதான் தற்போது நிர்வாக குழு கூட்டத்தில் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025