பேச்சுவார்த்தை தோல்வி.! போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்கள் தமிழக அரசுக்கு கடிதம்.!
கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகளை கடிதம் மூலம் எழுதி தமிழக அரசுக்கு அனுப்ப உள்ளனர்.
கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்காமல் அண்மையில் தமிழக அரசு நிறுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் போராட்டத்தினை அடுத்து தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து மீண்டும் போராட்டம் தொடங்கியது. இந்நிலையில் 9வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் இன்று செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகளை கடிதங்கள் மூலம் தமிழக அரசுக்கு வலிறுத்த கோரிக்கை கடிதங்களை எழுதி வருகின்றனர்.