தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது – பவன் கல்யாண்!
தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமாகிய பவன் கல்யாண் அவர்கள், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி நிர்வாகம் குறித்து பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்பிற்குரிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும்.
ஆனால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
To Hon. CM @mkstalin garu, pic.twitter.com/iIo0YMD1vT
— Pawan Kalyan (@PawanKalyan) August 31, 2021