கோர விபத்து ..! டோல்கேட்டில் மோதிய லாரி இருவர் உயிரிழப்பு..!
நேற்று கிருஷ்ணகிரி , பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்கசாவடி வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது பெங்களூரில் இருந்து சென்னை சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடி கட்டண வசூல் செய்யும் மையத்தில் மோதியது.
இதில் கட்டணம் வசூல் செய்யும் மையம் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. அப்போது லாரி இரு சக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இந்த விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சென்னப்பன் மற்றும் பரிமளா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
லாரி மோதிய கட்டண மையத்தில் வேலை செய்து வந்த பெண் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநர் சிவகுமாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.