89வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.! 4 மாநிலங்களுக்கு அழைப்பு.!
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது தொடர்பாக, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை தமிழகம், கர்நாடகா , கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில நீர்வளத்துறை நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை செய்து முடிவு எட்டப்படும்.
முதலில் காவிரி ஒழுங்காற்று மையம், மேற்கண்ட மாநில அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, நீர்நிலைகளில் இருப்புகளை அறிந்து எந்தளவு தண்ணீரை திறந்துவிடலாம் என்பது குறித்த பரிந்துரைகளை வெளியிடும். காவிரி ஒழுங்காற்று மையத்தால் மாநில அரசுகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது.
யாரும் பயப்படாதீங்க! நாடு முழுவதும் எமர்ஜென்சி அலர்ட்! குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை!
இந்த பரிந்துரைகளை மாநில அரசு ஏற்கவில்லை என்றால் காவிரி மேலாண்மை வாரியம் குறிப்பிட்ட மாநில அரசுக்கு ஆலோசனைக்கு பிறகு உத்தரவுகளை வழங்கும். இந்த உத்தரவுகளை மாநில அரசு பின்பற்ற வேண்டும். இதுவரை 88 காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டமும் நடைபெற்று உள்ளது.
கடந்த முறை அக்டோபர் 13 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் தண்ணீரை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரையில் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 30ஆம் தேதி 89வது காவிரி ஒழுங்கற்று குழு கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய நாளில் தமிழகம் , கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் காணொளி வாயிலாக கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் கூறியது போல வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிநீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதா , கர்நாடக நீர் நிலைகளில் உள்ள நீர் இருப்பு நிலவரம், தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் அளவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.