தமிழகத்தில் இன்று 7-ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸின் தீவிரத்தை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துபவர்களை ஊக்குவிப்பதற்காக வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் பின்பதாக செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாம் தடுப்பூசி முகாமும், செப்டம்பர் 26-ஆம் தேதி மூன்றாம் தடுப்பூசி முகாமும், கடந்த அக்டோபர் 3 -ஆம் தேதி நான்காம் தடுப்பூசி முகாமும், 10-ஆம் தேதி 5 ஆம் தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்ட நிலையில் மது பிரியர்களுக்காக இறைச்சி சாப்பிடுபவர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம் கடந்த வாரம் முதல் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
இதனால் கடந்த 23 ஆம் தேதி சனிக்கிழமை ஆறாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதிலும் ஏழாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி முகாமிற்காக தமிழகம் முழுவதிலும் மூவாயிரத்துக்கும் அதிகமான மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடை பெறக் கூடிய இந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…