ஊராட்சி மன்ற தலைவராக 73 வயதான மூதாட்டி.!
- தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- கமுதி அருகே தரைகுடியில் ஊராட்சி மன்ற தலைவராக 73 வயது மூதாட்டி வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள ஒன்றிய கவுன்சிலர் 5067 பதவிக்கு தி.மு.க கூட்டணி 2,052 இடங்களிலும் , அ.தி.மு.க கூட்டணி1,964 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.மேலும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 515 இடங்களில் அ.தி.மு.க கூட்டணி 227 இடங்களிலும் ,தி.மு.க கூட்டணி 248 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தரைகுடியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 73 வயதான தங்கவேல் என்ற மூதாட்டி போட்டியிட்டு உள்ளார். மூதாட்டி தங்கவேல் 62 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்றார்.
வெற்றி குறித்து தங்கவேலு கூறுகையில், மகள்களிடமும் , பேரன்களிடமும் ஆலோசனை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றேன்.கிராமத்திற்கு சேவை செய்வதற்காக மக்கள் தன்னை வெற்றி பெற வைத்துள்ளார்கள். மேலும், தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.