72 வயதில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி- திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சோகம்
- ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்றன.
- ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிவேல் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.
இதற்கு இடையில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிவேல் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு மணிவேல் என்ற 72 வயது முதியவர் போட்டியிட்டார்.வாக்கு எண்ணிக்கை முடிவில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதற்கான சான்றிதழை அவரை நேற்றே பெற்றுவிட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.இவரது இறப்பு ஆதனூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.