தமிழக அரசால் போராடி பெறப்பட்டது தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு!
தமிழக அரசால் போராடி பெறப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் உள்ளது என சந்திப் நந்தூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று உள்ளது. இந்த பாராட்டு விழாவில் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள், தமிழக அரசு போராடிக் கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாகப் பல ஏழை மாணவர்கள் தற்பொழுது மருத்துவம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு 8 அரசு பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவம் படித்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.