கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடங்க உள்ளது – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடங்க உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடங்க உள்ளது .விரைவில் ஆதிச்சநல்லூர், கொற்கை பகுதியிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.