சுருக்குமடி வலையை எதிர்த்து போராடிய மீனவர்களின் 5 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது!
சுருக்குமடி வலையை எதிர்த்து போராடிய மீனவர்களின் 5 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.
கடலூர் அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுருக்குமடி வலையை பயன்படுத்த கடந்த 2000-ம் ஆண்டே அரசு தடை விதித்திருந்த நிலையில், சில இடங்களில் இந்த வலை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், சாமியார்பேட்டையில், 32 கிராம மீனவர்கள் இணைந்து இந்த வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வலையை பயன்படுத்துவதால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, அங்கு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், 5 மணி நேரத்திற்கு பின் மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.