மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கடிதம் எழுதிய 3ம் வகுப்பு மாணவன்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- திருப்பூர் 3-ம் வகுப்பு மாணவன் மாவட்ட ஆட்சியருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்ததால் நன்றி கடிதம் எழுதியுள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் இணையத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சிக்கினாபுரத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவன் தரணேஷ், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அன்புள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நானும் எனது நண்பர்களும் பள்ளிக்கு நடந்துதான் செல்வோம் என்றும் எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் வரை நடந்து செல்ல இருப்பதால் கஷ்டமாக இருக்கிறது. அதுவும் மழைக் காலங்களில் பள்ளிக்கு செல்லும் வழியில் ஓடைமுழுவதும் தண்ணீர் செல்லும். அந்த ஓடையை தாண்டித்தான் நாங்கள் பள்ளிக்கு செல்ல முடியும் என்று கூறிருந்தார். மேலும் எங்கள் பகுதியில் இருக்கும் சகோதர்கள் சமூக வலைதளத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தனர்.
சிக்கினாபுரம் அரசு நடுநலைப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் தரணேஷ் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்! #நம்மால்முடிந்தது #திருப்பூர் #தாராபுரம் pic.twitter.com/OVvI1lDBEz
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) February 21, 2020
பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பணிமனை மேளாலர் தாராபுரம் அவர்கள் இன்னும் 10 நாட்களில் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த செய்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் பேருந்து வசதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த தங்களுக்கு எனது பள்ளி சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தங்களுக்கு நேரம் இருந்தால் பேருந்து துவக்க விழாவிற்கு வருகை தரவேண்டும் என்று குறிப்பிட்டார். பள்ளி மாணவனின் கடிதத்தை பார்த்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்திகேயன் ட்விட்டர் பக்கத்துல் மாணவனுக்கும், அவரது நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறி மாணவனின் கடிதத்துடன் பதிவிட்டுள்ளார். மாணவனின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
February 12, 2025![senthil balaji edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/senthil-balaji-edappadi-palanisamy-.webp)
“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?
February 12, 2025![mitchell starc](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mitchell-starc.webp)
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)