சென்னையில் 3 மண்டலங்கள் கருஞ்சிவப்பு மண்டலமானது
சென்னையில் 3 மண்டலங்கள் கருஞ்சிவப்பு மண்டலமாகியுள்ளது.
கொரோனா பரவி வரும் சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தினந்தோறும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது .கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது .
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6535 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் 526 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .சென்னையை பொறுத்தவரை 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் சென்னையில் 3330பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3 மண்டலங்களும் கருஞ்சிவப்பு மண்டலமாகியுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்து வந்தது.தற்போதைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பில் சென்னை மண்டலத்தை பொருத்தவரை ராயபுரம் முதலிடத்தில் உள்ளது.கோடம்பாக்கத்தில் 563 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது திரு.வி.க.நகரில் 519 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Here’s the zone wise breakup of Covid-19 positive cases in #Chennai.#Covid19Chennai#GCC #ChennaiCorporation pic.twitter.com/BEpL44bBlN
— Greater Chennai Corporation (@chennaicorp) May 10, 2020