கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66 .இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சம் காரணமாக இவர் வீட்டில் தனிபடுத்தப்பட்டிருந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார். இன்று திடீரென உயிரிழந்தார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை.இவரது மகன் சவூதி அரேபியாவில் பணியாற்றி கடந்த 13-ம் தேதி ஊருக்கு திரும்பிய நிலையில் அவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவர் இறந்த அதே வார்டில் 2 வயது ஆண் குழந்தை, 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ளனர்.ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
#Update: The 3 death in Kanyakumari Medical College is not related to #Covid19. #TNHealth pic.twitter.com/BBVJL8sOrH
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 28, 2020
1.2 வயது குழந்தை பிறவி எலும்புநோய் காரணமாகவும்,
2.66 வயது மீனவர் சிறுநீரக நோய் காரணமாகவும்,
3.24 வயது இளைஞர் நிம்மோனியா தொற்றினால் குருதியில் ஏற்பட்ட நச்சுதன்மை காரணமாகவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.