அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் தொடர் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரை வென்று இறுதிப்போட்டிக்குச் சென்ற பிரக்ஞானந்தா, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். டை பிரேக்கர் சுற்றுவரை சென்ற இந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதனால் 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, 21 ஆண்டுகளுக்கு பிறகு உலக செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குச் சென்ற வீரர் என்ற சாதனை படைத்தார். இதனையடுத்து, உலகக்கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவை மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த பிரக்ஞானந்தாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்து, சென்னை வந்தடைந்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு மலர்கள் தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவை விளையாட்டுத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் பூங்கொத்துக்கொடுத்து வரவேற்றனர்.
இந்தப்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரக்ஞானந்தா. “டீம் சாம்பியன்ஷிப் போட்டி என்பதால், நான் எப்பொழுதும் போல சாதாரணமாக தான் இருந்தேன். எங்கள் அணியில் அனைவரும் பலமான போட்டியாளர்களாக இருந்தார்கள். அதனால் உலகக்கோப்பை போல பதற்றம் இல்லாமல் சாதாரணமாக இருந்தேன். வருங்கால வீரர்கள் அழுத்தம் ஏதும் இல்லாமல் சந்தோஷமாக விளையாடுங்கள்”
“எப்பொழுது விளையாடினாலும் உங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். முடிவை பற்றி கவலைப்படாமல் உங்களுடைய ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தங்கப் பதக்கத்தை தவறவிட்டோம் என்று எண்ணம் அவ்வப்போது என் மனதில் இருக்கிறது. ஆனால், ஆனால், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் கிடைத்து எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.” என்று பிரக்ஞானந்தா கூறினார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…