+2 தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது; கண்டிப்பாக நடத்தப்படும்.! – அமைச்சர் அன்பில் மகேஸ்.!
பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 15 அல்லது ஒரு மாதத்திற்கு முன்பாகவே பிளஸ் டூ தேர்வு தேதியை அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்.
தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து எனவும் கொரோனா தொற்று குறைகிறதா என்பதை பொறுத்து தான் தேர்வு அறிவிக்கப்படும். பிளஸ் டூ பொதுத் தேர்வு தள்ளி போகுமா தவிர ரத்து செய்யப்படாது. மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்தார்.